வணக்கம் அன்பு இணைய உறவுகளே!

'தமிழமுதம்' என்ற இந்த இணையத்தளம் 01.09.2004ல் புதுப்பொலிவுடன் இராஜன் முருகவேல் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

தாய் நாட்டின் அவலங்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் புகலிடம் கோரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். பெரும்பாலானவர்கள் அகதிகள் என்ற பெயர்களுடன் குடியேறி, தமது உடல் உழைப்பைமட்டுமே மூலதனமாக இட்டு, படிப்படியாக தமது திறமைகளினால் முன்னேறி, புகலிட நாடுகளில் ஆழக் காலூன்றியுள்ளார்கள்.

இன்று புகலிடத் தமிழர்களின் வளர்ச்சியானது பல துறைகளிலும் வியத்தகு வேகத்தில் வியாபித்துள்ளது என்றால் மிகையில்லை. அந்நிய கலாச்சாரங்களிடையே தமக்கான பொழுதுகளில் தமது கலை கலாச்சார முன்னெடுப்புகளில் கணிசமான வெற்றிகளை அடைவதையும் போற்றாமல் இருக்க முடியாது.

தாயகத்தை மறக்காமல், தாயக மக்களுடனான தொடர்புகளை பேணியவாறே தமது வாழ்வையும் முன்நகர்த்திச் செல்லும் புகலிடத் தமிழர்களால் காலத்துக்குக் காலம் கலை இலக்கிய ரீதியில் பற்பல பதிவுகள் விரிந்து செல்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றையேனும் பதிவு செய்து ஏனைய உலகத் தமிழர்களுடனும் பகிர்ந்து கொள்வதன் மூலம், புகலிடத் தமிழர்களின் செயற்பாடுகளை உலகத் தமிழர்களும் அறியவேண்டும் என்ற ஆவலிலேயே 'தமிழமுதம்' என்ற இவ் இணையத்தளம் உருவானது.

முதற்கட்டமான, புகலிடத் தமிழர்களின் ஆக்கங்கள், மேடை நிகழ்வுகள், அவர்களால் உருவாக்கப்படும் பாடல்கள், புகலிடத்தில் வெளியாகும் புத்தகங்களின் மின்னூல் வடிவம் என தமிழமுதம் தனது பணியை செய்துகொண்டிருப்பதை அறிவீர்கள்.

மேலும், புகலிடஎழுத்தாளர் கலைஞர்களின் பேட்டிகள், முக்கிய நிகழ்வுகள் போன்றனவற்றையும் தமிழமுதம் இயலுமான வரையில் உலகத் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கும்.

அதேவேளையில், புகலிட நாட்டிலுள்ள கலை இலக்கிய ஆர்வலர்கள் யாவரும் தங்கள் பங்களிப்பை ஆக்கங்கள், பாடல்கள், மின்னூல்கள், வீடியோ நிகழ்வுகள் என எமக்குத் தந்து எமது பணியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளுகிறோம்.

தொடர்புகளுக்கு:
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நன்றி.

அன்புடன்,
தமிழமுதம் நிர்வாகம்
We use cookies to improve our website. Cookies used for the essential operation of this site have already been set. For more information visit our Cookie policy. I accept cookies from this site. Agree